சிங்கப்பூரைச் சேர்ந்த கவி அவர்கள் பெரியாரின் மொழிப் பார்வை மீதான அவதூறுகளை மறுத்து எதிர்த்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் ஓராண்டுக்கு முன்பு தோழர் மதிமாறன் அவர்களின் தளத்தில் வெளியிடப்பட்ட போது இதையொட்டிப் பெரும் விவாதங்கள் நிகழ்ந்தது. பின்னூட்டங்களில் நிகழ்ந்த அந்த விவாதங்களையும் மின்-நூலில் சேர்க்க வேண்டும் என்று விரும்பிய போதும் கால நெருக்கடி காரணமாக அதனைச் சேர்க்க முடியவில்லை.
ஓராண்டு காலம் தாமதமாக மின்-நூல் வெளிவந்திருந்தாலும் செம்மொழி மாநாடு நிகழ்ந்து முடிந்திருக்கக் கூடிய இந்த சூழல் நூலின் உள்ளடக்கத்தை மீண்டும் விவாதிக்க வேண்டிய நிலைக்கே இட்டுச் செல்கிறது. வாசகர்கள் கட்டுரைகளுடன் அவற்றையொட்டி நடந்த பின்னூட்ட விவாதங்களையும் அறியும் பொருட்டு, அவற்றுக்கான சுட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.
[பெரியாரின் மொழிக் கொள்கை - கவி]
பின்னூட்ட விவாதங்களை அறியும் பொருட்டு தோழர் மதிமாறனின் தளத்தில் வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள்:
‘திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3
‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4
‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5
‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6
பெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்
No comments:
Post a Comment