Sunday, July 18, 2010

பெரியாரின் மொழிக் கொள்கை

சிங்கப்பூரைச் சேர்ந்த கவி அவர்கள் பெரியாரின் மொழிப் பார்வை மீதான அவதூறுகளை மறுத்து எதிர்த்து எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு. இக்கட்டுரைகள் ஓராண்டுக்கு முன்பு தோழர் மதிமாறன் அவர்களின் தளத்தில் வெளியிடப்பட்ட போது இதையொட்டிப் பெரும் விவாதங்கள் நிகழ்ந்தது. பின்னூட்டங்களில் நிகழ்ந்த அந்த விவாதங்களையும் மின்-நூலில் சேர்க்க வேண்டும் என்று விரும்பிய போதும் கால நெருக்கடி காரணமாக அதனைச் சேர்க்க முடியவில்லை.

ஓராண்டு காலம் தாமதமாக மின்-நூல் வெளிவந்திருந்தாலும் செம்மொழி மாநாடு நிகழ்ந்து முடிந்திருக்கக் கூடிய இந்த சூழல் நூலின் உள்ளடக்கத்தை மீண்டும் விவாதிக்க வேண்டிய நிலைக்கே இட்டுச் செல்கிறது. வாசகர்கள் கட்டுரைகளுடன் அவற்றையொட்டி நடந்த பின்னூட்ட விவாதங்களையும் அறியும் பொருட்டு, அவற்றுக்கான சுட்டிகளும் இணைக்கப்பட்டுள்ளது.


[பெரியாரின் மொழிக் கொள்கை - கவி]


பின்னூட்ட விவாதங்களை அறியும் பொருட்டு தோழர் மதிமாறனின் தளத்தில் வெளிவந்த பதிவுகளின் சுட்டிகள்:

திராவிடர் என்ற சொல் தமிழர்களைத்தான் குறிக்கிறது’ பெரியாரின் நுட்பம் – 3
‘தாய்மொழி என்று பிடிவாதம் செய்வதும் அறியாமைதான்’-பெரியாரின் விசாலம்-4
‘தமிழனை, தமிழைக் கெடுத்தவர்கள், தமிழ்ப்பண்டிதர்களே’-பெரியாரின் வீச்சு -5
‘புலவர் என்றால் சொந்தபுத்தி இல்லாதவன், புளுகன்’- பெரியார் வைக்கும் குட்டு – 6 
பெரியாரின் மொழிக் கொள்கையிலும் தமிழரின் முன்னேற்றம்தான்

குடி அரசு - பெரியார் திராவிடர் கழகத்தின் மென்னூல் வெளியீடு

அறிவு சார்ந்த மென்-நூல்களை வெளியிடுவதையும், பகிர்வதையும் நோக்கமாகக் கொண்டு தொடங்கப்பட்டுள்ள “தெலங்கானா” தளம் முதன் முதலில் பெரியாரின் எழுத்துக்களை உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் பேருவகை அடைகிறது.

பெரியாரின் இந்த ஆக்கங்களை வெளிக் கொண்டுவரப் பெரும் போராட்டங்களைச் சந்தித்த பெரியார் திராவிடர் கழகத்தினரின் உறுதி போற்றுதலுக்குரியது.

பெரியார் திகவின் வெப்தளமான www.periyardk.org இல் அத்தனை மின்னூல்களும் அடங்கிய தொகுப்பு பதிவிறக்கத்திற்குக் கிடைக்கிறது. பதிவிறக்கத்தில் ஏற்படும் காலதாமதத்தைக் கருத்தில் கொண்டு தனித் தனி நூல்களாக வலையேற்றியுள்ளோம். தரவிறக்கிப் படித்துப் பயன்பெறுக.

11,000 பக்கங்கள் கொண்ட இந்நூலின் அச்சுப் பதிப்பை வாங்க விரும்புவோருக்காகப் பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள அறிவிப்பு:

பெரியார் திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள குடிஅரசு’ 27 தொகுதிகளும் (11,000 பக்கங்கள்), ‘ரிவோல்ட்ஆங்கில தொகுப்பும் (622 பக்கங்கள்) எல்லாவற்றுக்குமான குறுந்தகடும் இணைத்து -
ரூ.4500/-க்கே கிடைக்கும்.
தொடர்புக்கு: (வரைவோலை/மணியார்டர்)
தி. தாமரைக் கண்ணன், வங்கிக் கணக்கு-எஸ்.பி. 30455291690, பாரத ஸ்டேட் வங்கி, பாரதிதாசன் பல்கலைகழகக் கிளை. பேசி: 9787313222
முகவரி: 1/810, முத்தமிழ் நகர், அடியனூத்து அஞ்சல்,
திண்டுக்கல்-624003.

குறிப்பு: பார்சலில் பெறுவதற்கு கூடுதலாக ரூ.100 சேர்த்து அனுப்பவும்.

நன்றி: பெரியார் திராவிடர் கழகத்திற்கு


மென்-நூல்களைத் தரவிறக்கம் செய்ய:
[பகுதி 1]
| [பகுதி 2] | [பகுதி 3] | [பகுதி 4] | [பகுதி 5] | [பகுதி 6] | [பகுதி 7] | [பகுதி 8] | [பகுதி 9] | [பகுதி 10] | [பகுதி 11] | [பகுதி 12] | [பகுதி 13] | [பகுதி 14] | [பகுதி 15] | [பகுதி 16] | [பகுதி 17] | [பகுதி 18] | [பகுதி 19] | [பகுதி 20] | [பகுதி 21] | [பகுதி 22] | [பகுதி 23] | [பகுதி 24] | [பகுதி 25] | [பகுதி 26] | [பகுதி 27] | [பகுதி 28 - ரிவோல்ட் ஆங்கிலப் பதிப்பு]